உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் பரவிய வதந்தி... காபி அருந்தும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
Mar 16, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
BIG STORIES
பீகார் சட்டமன்ற தேர்தல் - NDA மாபெரும் வெற்றி..! இண்டியா கூட்டணி கட்சிகள் படுதோல்வி..! டெபாசிட்டை இழந்த PK.வின் கட்சி.!
Nov 14, 2025 04:24 PM
160
பீகார் சட்டமன்ற தேர்தல் - NDA மாபெரும் வெற்றி..! இண்டியா கூட்டணி கட்சிகள் படுதோல்வி..!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக-ஜேடியூ தலைமையிலான NDA கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வென்று, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாத்பந்தன் கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்று, படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி உள்ளிவை அடங்கிய தேசிய ஜனநாய கூட்டணி முன்னிலை பெற்று, மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.
101 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. தற்போதைய தேர்தலில் அதை விட அதிக இடங்களில் வென்றுள்ளது. இதையடுத்து, தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து உள்ளது.
அதேபோல், 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தற்போது வரை 80 தொகுதிகளை வென்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 43 இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளம் தற்போது அதை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வாகை சூடியுள்ளது. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்ட 29 தொகுதிகளில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மறுபுறம் இண்டியா கூட்டணி இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 35 இடங்களில் மட்டுமே வென்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2020 தேர்தலில் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்த ஆர்.ஜே.டி, இம்முறை படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது. ஆர்.ஜே.டி கட்சியின் தலைவரும், லாலுவின் மகனுமான, தேஜஸ்வி யாதவ் வாகை சூடியுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பீகாரில் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, வெறும் 6 தொகுதியில் மட்டும் முன்னிலை பெற்றது. கடந்த தேர்தலில் 19 இடங்களில் வென்ற நிலையில் இம்முறை இரட்டை இலக்க தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹைதாராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 5 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. பல இடங்களில், காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கான வாக்குகளை பறித்து, தோல்வியை அளித்திருக்கிறது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்ட, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின், ஜன் சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்ததோடு, டெபாசிட்டையும் இழந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu