உலகம்
999 படிக்கட்டுகள் மீது அசால்டாக ஏறிய ரேஞ்ச் ரோவர்!
Nov 14, 2025 01:06 PM
67
999 படிக்கட்டுகள் மீது அசால்டாக ஏறிய ரேஞ்ச் ரோவர்!
சீனாவின் டியான்மென் மலையில் உள்ள 999 படிக்கட்டுகள் மீது ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று அசால்டாக ஏறும் வீடியோ அண்மையில் வைரல் ஆன நிலையில், அதேபோன்ற சாகசத்தை செய்யும் முயற்சியில் சீனாவின் செர்ரி நிறுவனம் தோல்வியைத் தழுவியது.
அந்நிறுவனம் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்திய Fengyun SUV மலை படிக்கட்டு மீது ஏறும்போது பாதி வழியில் நின்றது. பின்னோக்கி இறங்கிய வாகனம் கைபிடிச் சுவர் மீது மோதியது.
பாதுகாப்புக்காக வாகனத்தில் கட்டப்பட்ட கயிறு டயரில் சிக்கியதால் இவ்வாறு நடந்ததாகவும், சேதமடைந்த கைப்பிடி சுவரை சீரமைத்து தருவதாகவும் செர்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu