தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
உலகம்
ஒருமுறை பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.. வெற்றிகரமாக செய்துகாட்டியது ஜெப் பெசோஸின் 'புளூ ஆர்ஜின்' நிறுவனம்
Nov 14, 2025 09:40 AM
31
ஒருமுறை பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்..
அமெரிக்காவில், ஒருமுறை பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டுமே வெற்றிகரமாக செயல்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஜெப் பெசோஸின் புளூ ஆர்ஜின் நிறுவனமும் அதை செய்துகாட்டியுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் 2 நாசா விண்கலங்களை சுமந்தபடி புளோரிடாவிலிருந்து ஏவப்பட்ட புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ கிளென் ராக்கெட், 2 விண்கலங்களையும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.
அதன் பின் அந்த ராக்கெட்டின் அடிப்பகுதியிலிருந்த பூஸ்டர், வெற்றிகரமாக பிரிந்து அட்லாண்டிக் பெருங்கடலில் அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் தளத்தில் தரை இறங்கியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu