தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
தமிழ்நாடு
"என் காதலிய ஏன் அப்பாவோட அனுப்பி வச்ச? " குத்துனது நண்பனா இருந்தா.. நண்பர்களின் பகீர் வாக்குமூலம்..!
Nov 14, 2025 05:56 AM
348
"என் காதலிய ஏன் அப்பாவோட அனுப்பி வச்ச? " குத்துனது நண்பனா இருந்தா.. நண்பர்களின் பகீர் வாக்குமூலம்..!
கடந்த புதன்கிழமை காலையில், கும்பகோணம் அருகே உள்ள சாத்தங்குடி பலவாற்று மதகு பகுதியில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்
கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங், மற்றும் தஞ்சை தடவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் ஏராகாரம் முத்தமிழ் நகரை சேர்ந்த 25 வயது பாலாஜி என்பதும், அவர் இரவே கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த கொலையை செய்தது யார்? என போலீசார் துப்பு துலக்க ஆரம்பித்தனர். அக்கம் பக்கத்தில் போலீசார் விசாரித்தபோது, பாலாஜி எப்போதும் அவரது நண்பர்களான அபிஷேக், பிரவீன் ஆகியோருடன் தான் சுற்றுவார் எனவும், அன்று இரவு கூட மூவரும் ஒன்றாக பைக்கில் சென்றதாகவும் தகவல் கிடைத்தது.
உடனே அபிஷேக், பிரவீன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து, தங்களது பாணியில் விசாரித்தபோது தான் என்ன நடந்தது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இறந்த பாலாஜி ட்ரம்ப் செட் வாசிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி, பாலாஜி வீட்டில் இருந்தபோது, அவரது நண்பரான அசூர் கீழத்தெரு பகுதியை 19 அபிஷேக், 18 வயது பெண்ணை பாலாஜியின் வீட்டிற்கு அழைத்து வந்துதுள்ளார். இந்த பெண்ணை தான் நான் காதலித்து வருகிறேன், விரைவில் திருமணமும் செய்ய உள்ளேன் என அபிஷேக் பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரின் தந்தையோடும் பாலாஜிக்கு பழக்கம் இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து, உங்களது மகளை வந்து அழைத்து செல்லுங்கள் என கூற, அப்பெண்ணின் தந்தை கோபத்தோடு சென்று அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இதற்கிடையில், பாலாஜி அபிஷேக்கின் மொபைல் போனையும் வாங்கி வைத்துள்ளார். தனது காதலியின் தந்தையிடம் ஏன் அப்படி சொன்னாய் என அபிஷேக் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் தனது மொபைல் போனை கொடு என கேட்டதற்கு, என்னிடம் உன் போன் இல்லை, கொடுத்துவிட்டேன் என சமாளித்துள்ளார்.
இதையடுத்து மறுநாள் இரவு அபிஷேக், அவரது நண்பனான கும்பகோணம் அய்யனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரவீன், பாலாஜி ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் அருகே உள்ள சாத்தங்குடி பலவாற்று மதகு பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது மது போதையில் அபிஷேக், நேற்று ஏன் காதலியை அவரது அப்பாவிடம் மாட்டிவிட்டாய் என ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்துள்ளார். "என் போனை நீ தான் வச்சுருக்கனு எனக்கு தெரியும், அதை என்கிட்ட கொடுத்துரு" என அபிஷேக் கூற, "நீ போதையில் மறந்துவிட்டு என்னிடம் திரும்ப கேட்குறியா" என அபிஷேக்கின் கன்னத்தில் அறைந்து, இருசக்கர வாகனத்தில் இருந்த கத்தியை எடுத்து பாலாஜி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அபிஷேக் அருகில் கிடந்த கட்டையால் பாலாஜியை தாக்க பாலாஜி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அடுத்த நிமிடமே அபிஷேக்கும், பிரவீனும் பாலாஜியின் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி பாலாஜியை வாய்க்காலில் தள்ளிவிட்டு கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலாஜி அங்கேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் அபிஷேக்கும் மற்றும் பிரவீனும் அங்கிருந்து தப்பி சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அபிஷேக், பிரவீன் ஆகிய இருவரையும் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu