RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

முகப்பு

அழுது கெஞ்சிய இளம்பெண்.. லாட்ஜில் அந்த சித்ரவதை ஆட்டோ டிரைவர் சிக்கினான்.. ஆன்லைன் பழக்கத்தால் விபரீதம்..!

Nov 13, 2025 01:07 PM

298

அழுது கெஞ்சிய இளம்பெண்.. லாட்ஜில் அந்த சித்ரவதை ஆட்டோ டிரைவர் சிக்கினான்.. ஆன்லைன் பழக்கத்தால் விபரீதம்..!

"பாட்டி இறந்து 3 நாள் தான் ஆகுது" கெஞ்சியும் விடல..! காதல் வலையில் வீழ்த்திய காமுகனின் கொடூர செயல்..!

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிகாம் படிப்பை முடித்துவிட்டு வீட்டிலிருந்து வந்துள்ளார். அப்போது அவர் மோஜ் என்ற சமூக வலைதள செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் ராஜ் என்ற 25 வயது இளைஞன், மோஜ் செயலி மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.


முதலில் நட்பாக பேசி வந்த லிபின் ராஜ், பின்னர் தினமும் செல்போனில் பேசி அந்த பெண்ணோடு நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஒருகட்டத்தில், காதலிப்பதாக கூறி லிபின் ராஜ், அந்த பெண்ணிடம் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை ஆடைகள் இல்லாமல் வீடியோ காலில் பேச சொல்லி, அந்த பெண்ணிற்கே தெரியாமல் அதை லிபின் ராஜ் புகைப்படமாக எடுத்து வைத்திருந்துள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம் , அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்ட லிபின் ராஜ், "நீ உடனே பெரிய மேட்டில் உள்ள லாட்ஜிற்கு வர வேண்டும், இல்லையென்றால் உனது நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண், என்ன செய்வது என்று தெரியாமல், பெரிய மேட்டில் உள்ள லாட்ஜிற்கு சென்றுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற லிபின் ராஜ் , அந்த பெண்ணை லாட்ஜில் வைத்து மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.


பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட லிபின் ராஜ், மீண்டும் லாட்ஜிற்கு வா என மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண், தனது பாட்டி இறந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது, என்னால் வரமுடியாது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே லாட்ஜிற்கு வந்தபோதே அந்த பெண்ணின் மொபைலில் இருந்து தாயாரின் மொபைல் எண்ணை எடுத்து வைத்திருந்த லிபின் ராஜ், தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ,ஆத்திரத்தில் அந்த பெண்ணின் தாயாரின் மொபைல் எண்ணிற்கு, அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார், இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அதன் பேரில் நம்பிக்கை மோசடி , பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த லிபின் ராஜை போலீசார் கைது செய்தனர். அப்போது தான் லிபின் ராஜ் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், இது போன்று வேறு எந்த பெண்களையாவது லிபின் ராஜ் மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களோடு, அதிலும் குறிப்பாக ஆன்லைன் பழக்கத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies