ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
கார் வெடிப்பு சம்பவம் பற்றி ஆலோசித்த மத்திய அமைச்சரவை
Nov 13, 2025 05:07 AM
67
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
டெல்லி கார் வெடிப்பை தொடர்ந்து செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வழக்கின் விசாரணை நிலை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
டெல்லி முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள், கிடைத்த ஆவணங்கள் குறித்து பிரதமரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu