இந்தியா
கார் வெடிப்பு - காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்த பிரதமர்
Nov 12, 2025 09:41 AM
95
கார் வெடிப்பு - காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்த பிரதமர்
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நடந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பூடான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு டெல்லி வந்த பிரதமர், விமான நிலையத்தில் இருந்து நேராக கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார்.
சிகிச்சையில் உள்ளவர்களை தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்த பிரதமர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், டெல்லி கார் வெடிப்பு சதிச் செயலுக்கு பின்னால் உள்ளவர்கள் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu