முகப்பு
சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரிலேயே நடந்த வழிபறி சம்பவம்
Nov 11, 2025 01:11 PM
75
சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரிலேயே நடந்த வழிபறி சம்பவம்
சென்னை மயிலாப்பூரில் டிஜிபி அலுவலகம் எதிரிலேயே நடந்த வழிபறியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் - மலர்கொடி தம்பதி, கடந்த ஞாயிறன்று தங்களது மகளின் பிறந்த நாளுக்காக குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள ஓட்டலுக்குச் சென்றுவிட்டு இருவர் மட்டும் வீடு திரும்பியுள்ளனர்.
டிஜிபி அலுவலகம் எதிரில் சென்றுகொண்டிருந்த போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த இளைஞர் மலர்கொடியின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்று, பின்னர் கைபையை பறித்ததில் தம்பதியினர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் நேற்று கொடுத்த தகவலின் படி, மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராமதாஸ் என்ற கொள்ளையனை கைது செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu