ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
"காசி தமிழ்ச் சங்கமம் என்பது பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வை" - ஆளுநர் ஆர்.என்.ரவி
Nov 11, 2025 09:04 AM
34
"காசி தமிழ்ச் சங்கமம் என்பது பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வை" - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்சியை நேற்று தொடங்கிவைத்த ஆளுநர், காசி தமிழ்ச் சங்கமம் என்பது பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வை என்றார்.
இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் விழா, ‘தமிழ் கற்கலாம்’ எனும் தலைப்பில் நடத்தப்படுகிறதாகவும் 300 உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழகம் வந்து தமிழ் பயில உள்ளனர் என்றும் கூறினார்.
வேறு மாநில மக்களை தமிழ் படிக்க வைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் ஆளுநர் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu