முகப்பு
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - தமிழகத்தில் முக்கிய இடங்களில் தீவிர சோதனை
Nov 11, 2025 04:53 AM
70
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததன் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடனும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 100 வாகனங்களில் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளின் உடைமைகள் பேருந்துகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னையின் நுழைவாயிலான தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்க பணிகளை செய்து வருகின்றனர். தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதியில் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இதேபோல் திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீசார் குழுவினர் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகில் என்கிற வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
இதேபோல் மதுரையில் விமானநிலையம், ரயில் நிலையம், முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீசார் தீவிர ரோந்துப் பணியையும், சோதனையையும் மேற்கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu