கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
தமிழ்நாடு
22 சவரன் நகை திருட்டு.. திருடனை அடையாளம் காட்டிய கால் கட்டை விரலுக்குப் பக்கத்திலுள்ள நீளமான விரல்..
Nov 10, 2025 01:37 PM
59
திருவாரூரில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் என்பவரது வீட்டில் 22 சவரன் நகை திருடிய ஆசாமியை, அவரது கால் கட்டை விரலுக்குப் பக்கத்திலுள்ள விரல் நீளமாக இருப்பதை வைத்து கண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 16ஆம் தேதி நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாகப் போலீசார் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான ஆசாமிக்கு கால் கட்டை விரலுக்குப் பக்கத்திலுள்ள விரல் நீளமாக இருப்பது தெரியவந்தது.
அதனை அடையாளமாக வைத்து, போலீசார் தங்கள் பதிவேட்டில் இருந்த திருடர்களின் விவரங்களை ஆய்வு செய்தபோது, அந்த நபர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, சேலத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்து கைது செய்தனர்.
ஊர் ஊராகத் திருவிழாக்களில் ராட்டினம் போடுவது போல் சென்று, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டுத் திருடுவதை பிரபு வழக்கமாகக் கொண்டிருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu