ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
'துள்ளுவதோ இளமை' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அபிநய் காலமானார்
Nov 10, 2025 01:21 PM
170
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் அபிநய், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தாஸ், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களில் இவர் நடித்துள்ளார்.
44 வயதாகும் அபிநயின் பெற்றோர் அண்மையில் உயிரிழந்த நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல், உறவினர்களோடும் ஒட்டாமல் நண்பர்கள் வீடு, விடுதி, கடைசியாக தற்போது இறந்த கோடம்பாக்கம் வீடு என தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
பட வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்காத நிலையில், KPY பாலா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் பணம் கொடுத்து உதவி செய்து வந்துள்ளனர்.
தற்போதும் கூட உறவினர்கள் வருவதற்குத் தாமதமான நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் நடிகர் பாலாவும் இணைந்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அபிநய் உடல், ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu