குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
அமெரிக்க மக்களுக்குத் தலா 2,000 டாலர் வழங்கப்படும் - டிரம்ப்
Nov 10, 2025 03:51 AM
690
அமெரிக்க மக்களுக்குத் தலா 2,000 டாலர் வழங்கப்படும் - டிரம்ப்
பரஸ்பர வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில், அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது அரசு அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையால், பணவீக்கம் இல்லாத நாடாக, உலகின் பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் என்றும் ட்ரூத் சோசியல் சமூக வலைத்தள பதிவில் டிரம்ப் விமர்சித்துள்ளார். பரஸ்பர வரி விதிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு டிரில்லியன் கணக்கில் வருமானம் கிடைப்பதாகவும், விரைவில் தனது ஒட்டுமொத்த கடனில் 37 டிரில்லியன் டாலரை அமெரிக்கா அடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் சாதனை அளவில் முதலீடுகள் குவிந்து வருவதாகவும், ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu