தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
இந்தியா
அரசு அதிகாரி எனக் கூறி, மூதாட்டிகளைக் குறிவைத்து நகை, பணம் பறிப்பு
Nov 09, 2025 01:38 PM
27
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 70 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல திருடனை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.
மூதாட்டிகளைக் குறிவைத்து, அரசு அதிகாரி எனக் கூறி, பணம், நகைகளைப் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த மாதம் 70 வயதான சந்திரா என்பவருக்கு பஸ் பாஸ் எடுத்துத் தருவதாகக் கூறி அவரை அழைத்துச் சென்ற அந்த நபர், போட்டோ எடுக்கும்போது கழுத்தில் நகைகள் இருக்கக் கூடாது எனக் கூறி, சந்திரா அணிந்திருந்த 4 சவரன் நகைகளை கழற்றச் சொல்லி வாங்கிக் கொண்டு மாயமானார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விசாரணையில் இறங்கிய போலீசார், திருச்சி பேருந்து நிலையத்தில் வைத்து சித்திரவேலு என்ற அந்த நபரைக் கைது செய்தனர். சந்திராவின் நகைகளை விற்று வைத்திருந்த மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu