RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

கொல்கத்தாவுக்கு ஓட்டம்.. மாவுகட்டிலிருந்து தப்பிக்க ரவுடி பிரதர்ஸ் மாஸ்டர் பிளான்..!

Nov 09, 2025 03:53 AM

38

கொல்கத்தாவுக்கு ஓட்டம்.. மாவுகட்டிலிருந்து தப்பிக்க ரவுடி பிரதர்ஸ் மாஸ்டர் பிளான்..!

போலீசுக்கு பயந்து கொல்கத்தாவுக்கு ஓடிய ரவுடிகள்.. மாவுகட்டை தடுக்க... மாஸ்டர் பிளான் வீடியோ..!

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி பிரதர்ஸ்ஸான குள்ள வினோத், பாலாஜி ஆகியோர்

கொல்கத்தா காவல் நிலியத்தில் இருந்து யூடியூப்பில் பதிவிட்ட வீடியோ இது தான்..!

சரித்திரபதிவேட்டு குற்றவாளியான குள்ள வினோத் மீது 4 கொலை , கொலை முயற்சி , கஞ்சா விற்பனை என 21 வழக்குகளும் அவனது தம்பி பாலாஜி மீது 12 வழக்குகளும் உள்ளது. இதில் குள்ள வினோத்துக்கு 8 வாரண்ட் பெண்டிங் உள்ள தாகவும், பாலாஜிக்கு 3 வாரண்ட் பெண்டிங் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சென்னையில் இருந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று அஞ்சிய குள்ள வினோத் பாலாஜி ஆகிய இருவரும் இங்கிருந்து தப்பி ரெயில் மூலம் கொல்கத்தாவுக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.

அங்கிருந்த படியே அவர்களது அம்மா மற்றும் வழக்கறிஞர்களிடம் இரு ரவுடிகளும் பேசி வந்த நிலையில், இதனை வைத்து கொல்கத்தா விரைந்த சென்னை தனிப்படை போலீசார் இரு ரவுடிகளையும் கொல்கத்தாவில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர். குள்ள வினோத்தின் மனைவி குழந்தையும் அவருடன் அழைத்துச்சென்ற போலீசார் , கொல்கத்தா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் போலீசாரை கொல்கத்தாவரை அலைய விட்டதற்காக அவர்கள் மாவுகட்டு போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் ரவுடி பிரதர்ஸ் , கிரிமினல் புத்தியை பயன்படுத்தி காவல் நிலையத்துக்குள் இருந்து கொண்டே யூடியூப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டனர்மேலும் தனது தாய்க்கு தொடர்பு கொண்டு , தங்களை போலீசார் எந்த வழக்கிற்காக கைது செய்தனர் என்பதே தெரியவில்லை அதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறித்தி உள்ளனர். அதன்படி ரவுடி பிரதர்ஸின் தாயார் தேன்மொழி, சகோதரி மோகனா ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

மருத்துவ சிகிச்சைக்காக 2 மகன்களும் கொல்கத்தா சென்றதாகவும், சென்னை போலீசார் கொல்கத்தா சென்று அங்குள்ள போலீசார் உதவியோடு கைது செய்துள்ளனர். 2 மகன்களின் கை, கால்களையும் சென்னை போலீசார் உடைக்க வாய்ப்பு உள்ளது. பொய் வழக்கு போட வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தனர்


தங்கள் மீது உள்ள வழக்குகளுக்கு முறையாக ஆஜர் ஆகாமல் இருந்ததால் இருவர் மீதும் ஏராளமான பிடிவாரண்ட் நிலுவையில் இருந்ததாக தெரிவித்த போலீசார் அதன் காரணமாகவே இருவரையும் கொல்கத்தா சென்று கைது செய்து அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies