முகப்பு
பணிக்கு தாமதமாக வந்த நண்பரை கண்டித்த 65 வயதுகாரர் அடித்துக் கொலை
Nov 09, 2025 01:59 AM
41
கொலை செய்து விட்டு தப்பிய ஓடி பதுங்கியவரை தேடி பிடித்த காவல்துறை
திருப்பத்தூரில்,வேலைக்கு தாமதமாக வந்ததை கண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 35 ஆண்டுகால நண்பரை கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த 65 வயதான அந்தோணியும்,ஆசிரியர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயனும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர்.
இரவு பணியில் ஈடுபடும் அந்தோணியை காலை 7 மணிக்கு வந்து கார்த்திகேயன் மாற்றி விடுவது வழக்கம். ஆனால் தினமும் பணிக்கு தாமதமாக வந்ததால், சம்பவத்தன்று கார்த்திகேயனை, அந்தோணி கண்டித்தார். அருகில் இருந்த குச்சியை எடுத்து அவர் அடிக்கவும் செய்ததால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், அங்கு கிடந்த சிமெண்டு சிலாப்பை எடுத்து தலையில் அடித்ததில் அந்தோணி உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu