2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
சற்றுமுன்
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தம்பதி தற்கொலை முயற்சி.!
Nov 08, 2025 11:34 AM
53
தம்பதி தற்கொலை முயற்சி.!
நிலத்தை அளவீடு செய்ய பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு உபகரணம் மூலமாக தீயை கட்டுப்படுத்தி தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்த குமார்- பூங்கொடி தம்பதியரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 50 சதவீத தீக்காயத்துடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமாருக்கும் அவரது அண்ணனுக்கும் இடையே நிலம் அளப்பது தொடர்பான பிரச்னைக்கு நீண்ட காலமாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்காக மீண்டும் மனு அளிக்க தம்பதியர் வந்த போது, எஸ்.ஐ.ஆர் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுடன் சிறப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால் ஆட்சியரை சந்திக்க முடியாது என அதிகாரிகள் கூறியதால், மனமுடைந்து தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu