முகப்பு
கட்சி ஆரம்பித்த உடன் முதலமைச்சர் என தி.மு.க அறிவிக்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Nov 08, 2025 09:40 AM
54
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏதோ கட்சியை தொடங்கினோம்... அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்து திமுக ஆட்சிக்கு வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு ' திமுக -75' அறிவுத் திருவிழா என்ற தலைப்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விழா நடைபெற்றது. இதில், 46 பதிப்பகங்கள் சார்பில், 58 ஸ்டால்களுடன் நடைபெறும் முற்போக்கு புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை என்று கூறினார்.
திமுகவின் வரலாறு பற்றி தெரியாத சிலர் தங்களை மிரட்டிப் பார்ப்பதாகவும், சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என நினைப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
S.I.R விண்ணப்ப விநியோகம் நடைபெறும் நிலையில் களத்தில் பணியாற்றும் திமுகவினர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படாமலும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கருப்பு சிவப்பு நீலம் சேர்ந்த பின்னர், எந்த காவியாலும் திமுகவை வெல்ல முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திமுக -75' அறிவுத் திருவிழாவில், வைகோ, செல்வப்பெருந்தகை, ஈஸ்வரன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu