2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
முகப்பு
எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.!
Nov 08, 2025 06:45 AM
46
எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.!
தமிழ்நாட்டின் 4 ஜவுளி மற்றும் தொழில் நகரங்கள் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை வாரணாசியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த வந்தே பாரத் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, பெங்களூரு சென்று எர்ணாகுளம்-பெங்களூரு தவிர, காசி - கஜூராஹோ, லக்னோ-சகரான்பூர், டெல்லி-பெரோஸ்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவைகளையும், பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காசி-கஜூராஹோ வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விழாவில் பேசிய பிரதமர், புனித யாத்திரை தலங்களை வந்தே பாரத் ரயில் நெட்வொர்க் மூலம் இணைப்பது என்பது, நமது பாரம்பரியமிக்க நகரங்களை நாட்டின் முன்னேற்றத்திற்கான அடையாளமாக மாற்றுவதற்கான ஊக்கமாகும் என்றும் கூறினார்.
அயோத்தியில் ஸ்ரீ ராமர் திருக்கோயில் கட்டியெழுப்பப்பட்டு திறக்கப்பட்ட பின்னர், பக்தர்களின் வருகை கோடிக்கணக்கில் அதிகரித்து, உத்திர பிரதேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருப்பதே, அதற்கு எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu