தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
BIG STORIES
ரஷ்யாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவர் கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்ப முயற்சி... கணவரை மீட்டுத் தருமாறு கதறும் மனைவி
Nov 08, 2025 05:39 AM
277
ரஷ்யாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவர் கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்ப முயற்சி... கணவரை மீட்டுத் தருமாறு கதறும் மனைவி
நண்பருக்கு மொழி பெயர்ப்பு உதவிக்காக ரஷ்யா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை, அவர் உக்ரைனில் மருத்துவம் படித்தவர் என்பதற்காகவே, ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய மொழி தெரியும் என்பதால், தனது கணவரைக் கட்டாயப்படுத்தி போர்க் களத்துக்கு அனுப்ப முயற்சிகள் நடப்பதாகவும் அவரை மீட்டுக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஸ்வரன் - யாமினி தம்பதி. (( Gfx in )) உக்ரைனில் முதுநிலை மருத்துவம் படித்துக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன், கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த சமயம், இந்தியா திரும்பி யாமினியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், பணி நிமித்தமாக ரஷ்யா செல்ல வேண்டி இருந்த இவரது நண்பர் மணிவண்ணன், ஜெகதீஸ்வரனுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் அவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
நண்பருக்காகக் கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்ற ஜெகதீஸ்வரனுக்கு விமான நிலையத்திலேயே பிரச்சனை காத்திருந்தது. ஜெகதீஸ்வரனின் பின்புலத்தை விசாரித்த ரஷ்ய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிளுக்கு, அவர் உக்ரைனில் மருத்துவம் படித்தவர் என்பதும் ரஷ்ய மொழி தெரிந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் பாதுகாப்பு அதிகாரிகளை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறி, மணிவண்ணனையும் ஜெகதீஸ்வரனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
10 நாட்களில் மணிவண்ணனை விடுதலை செய்த அதிகாரிகள், ஜெகதீஸ்வரனை மட்டும் பல்வேறு காரணங்களைக் கூறி 43 நாட்கள் சிறையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. 43 நாட்கள் கழித்து விடுதலையானவர் இந்தியா புறப்படத் தயாரானபோது, விமான நிலையத்திலேயே வைத்து மீண்டும் அவரை அதிகாரிகள் கைது செய்ததாக யாமினி கூறுகிறார். "உக்ரைனில் மருத்துவம் படித்துவிட்டு, ரஷ்யாவுக்கு வந்திருக்கிறாயா" எனக் கேட்டு அதிகாரிகள் தனது கணவரைத் தாக்கியதாகவும் உணவு, தண்ணீர் சரியாகக் கொடுக்காமல், அடித்து உதைத்ததில், ஜெகதீஸ்வரன் கோமா நிலை வரை சென்றதாகவும் யாமினி கண்ணீருடன் கூறினார்.
ரஷ்ய மொழி தெரியும் என்பதால், போருக்குச் செல்ல வேண்டும் அல்லது 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவாய் என ஜெகதீஸ்வரனை அந்நாட்டு அதிகாரிகள் மிரட்டுகின்றனர் என்றும் யாமினி கூறுகிறார். கடந்த 2 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, சென்னை தலைமைச் செயலகம், டெல்லியிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் என்று மனுக்களோடு அலைந்து திரிவதாகக் கூறும் யாமினி, கணவரைக் காப்பாற்றித் தரும்படி, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu