முகப்பு
பெண் கடத்தல் எனக் கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்.. தான் கடத்தப்படவில்லை என பெண் வீடியோ வெளியீடு.!
Nov 07, 2025 04:04 PM
106
பெண் வீடியோ வெளியீடு.!
கோவை இருகூரில் சாலையில் நடந்துச் சென்ற பெண் காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தான் கடத்தப்படவில்லை, கணவர் தான் தன்னை அழைத்துச் சென்றதாக பெண் ஒருவர் கூறும் வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கணவருடன் பேக்கரிக்கு சென்று டீ குடித்து விட்டு திரும்பும் போது தகராறு ஏற்பட்டதால் காரிலிருந்து கீழே இறங்கியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். தன்னை காருக்குள் இழுத்து கணவர் அடித்ததால், தானும் திருப்பி அடித்தேன் என்றும் அந்தப் பெண் வீடியோவில் கூறியுள்ளார்.
முதலில் பெண் கடத்தப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததும், மாநகரிலுள்ள அனைத்து போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டதோடு, சுமார் 200 சி.சி.டி.வி. பதிவுகளை பார்வையிட்டு அந்த வாகனத்தில் பயணித்த தம்பதியரை கண்டறிந்ததாக காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu