ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
அமைச்சராக்கியது யார்? - இ.பி.எஸ் கருத்துக்கு கே.ஏ.செங்கோட்டையன் பதில்.!
Nov 07, 2025 10:59 AM
143
கே.ஏ.செங்கோட்டையன் பதில்.!
தமக்கு அமைச்சர் பதவி கொடுத்தது தான் தான் என எடப்பாடி பழனிசாமி கூறுவது வேதனையாக இருப்பதாகவும், தன்னை போன்றவர்கள் அன்று முன்மொழியவில்லை என்றால், இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என, கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் இ.பி.எஸ் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல், வேறு இடத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்தார்கள் என்று கே.ஏ.எஸ் தெரிவித்தார். முதல்வர் பதவியில் தொடர உதவிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்றியவர் இ.பி.எஸ் என்றும் கே.ஏ.எஸ் கூறினார்.
அதிமுக ஒற்றுமையாக வலிமையாக இருந்தால் கூட்டணி கட்சியினர் நம்மை தேடி வருவார்கள் என்றும், ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தனது காலில் செல்ல வேண்டும் பிறர் முதுகில் ஏறி சவாரி செல்லக்கூடாது என்றும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu