முகப்பு
பெண் ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்து 13 சவரன் நகை திருட்டு - பக்கத்து வீட்டு நபர் கைது
Nov 07, 2025 09:46 AM
95
13 சவரன் நகை திருட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பெண் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஸ்வரி என்பவரை, படுகொலை செய்து அவரிடமிருந்த 13 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஆவுடைபொய்கை அருகே இடம் பார்க்கச் சென்ற மகேஸ்வரி நீண்ட நேரம் வீடு திரும்பாததால், அவருக்கு இடம் பார்த்து கொடுக்கும் புரோக்கரை போலீசார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆவுடைபொய்கை பகுதிக்குச் சென்று போலீசார் தேடிய போது, தனது காரில் மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த சசிகுமார் கொலை செய்தது தெரியவந்தது.
அவரைப் பிடித்து விசாரித்தபோது, மகேஸ்வரிக்கு தான் கார் ஓட்டக் கற்றுக்கொடுத்ததாகவும், தான் கடன் பிரச்னையில் இருந்ததால், வசதியாக இருந்த மகேஸ்வரியைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிக்க திட்டமிட்டு, ஆவுடபொய்கை அருகே தனக்கு இடம் இருப்பதாகச் சொல்லி மகேஸ்வரியை காரில் அழைத்துச் சென்று தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்ததை சசிகுமார் ஒப்புக்கொண்டார்.
முன்னதாக, தான் இடம் பார்க்கச் செல்லும் தகவலை வாட்ஸ்ஆப் மூலம் வெளிநாட்டில் உள்ள தனது கணவர் மற்றம் புரோக்கருக்கு மகேஸ்வரி கூறிச் சென்றதால் வழக்கில் துரிதமாக துப்பு துலக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu