ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
மாவட்டம்
ரயிலில் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய தம்பதி கைது
Nov 07, 2025 07:29 AM
62
ரயிலில் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய தம்பதி கைது
ரயில் பயணத்தில் நகைத் திருடப்பட்டுவிட்டதாக நாடகமாடி, காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த தம்பதியை விழுப்புரம் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறையிலிருந்து மண்ணை அதிவிரைவு ரயிலில் விழுப்புரம் வந்த மகாலிங்கம் - ருக்மணி என்ற அந்த தம்பதி, 200 கிராம் தங்க நகைகள் வைத்திருந்த தங்களது பை ஒன்றை கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் வைத்திருந்த உடமைகளைப் பரிசோதித்தபோது, அதில் 30 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணத்துடன் 140 கிராம் தங்க நகைகளும் இருந்துள்ளன. அதுகுறித்து கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.
விசாரணையில் ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை நிர்வாகம் தங்களிடம் வாங்கும் நகைகளுக்குக் காப்பீடு வழங்கும் நிலையில், அதனைப் பெறுவதற்காக நகைக் கொள்ளை நடந்ததாக நாடகமாடியது தெரியவந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu