RECENT NEWS

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

BIG STORIES

யூடியூப்பரின் மூக்கை உடைத்த 96 நடிகை கௌரி கிஷன் ஆவேசம் ஏன்..? எடையை பற்றி பேசுவீங்க..?

Nov 07, 2025 01:06 AM

286

யூடியூப்பரின் மூக்கை  உடைத்த 96 நடிகை கௌரி கிஷன் ஆவேசம் ஏன்..? எடையை பற்றி பேசுவீங்க..?

யூடியூப்பரின் மூக்கை உடைத்த 96 நடிகை கௌரி கிஷன் ஆவேசம் ஏன்..? எடையை பற்றி பேசுவீங்க..?

உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூப்பருக்கு ஆக்ரோஷமான பதில்களால் பதிலடி கொடுத்த நடிகை கவுரிகிஷனால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது

96 படத்தில் பள்ளி பருவ திரிஷா வேடத்தில் , யமுனை ஆற்றிலே பாடலுக்கு வாயசைத்து பாப்புலரானவர் நடிகை கவுரி கிஷன்..! அந்த கதாபாத்திரத்துக்கு நேர் மாறாக நிஜத்தில் யூடியூப்பர் ஒருவரை வறுத்தெடுத்த காட்சிகள் தான் இவை..!

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் வெள்ளியன்று திரைக்கு வருகிறது. இப்படக்குழுவினரின் முந்தைய செய்தியாளர் சந்திப்பில், படத்தின் பாடலில் நாயகியை தூக்கினீர்களே அந்த நடிகையின் எடை என்ன ? என கதாநாயகனிடம் விவகாரமான யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனை மற்றொரு பேட்டியில் கண்டித்திருந்த நடிகை கௌரி கிஷன் , இது ஸ்டுப்பிட்டான கேள்வி என்றும் இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய அதர்ஸ் பட குழுவினரின் செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர், இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன், தனது உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி, என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம் என்றார்

எடை தொடர்பாக உங்களிடம் கேட்கவில்லை என்று யூடியூப்பர்கள் யூடர்ன் அடித்த நிலையில், கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என பதில் அளித்தார்.

இருப்பினும் நடிகை கௌரி கிஷனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் அவர் கண்கலங்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலை எதிர்த்து யாரும் கேள்வி எழுப்பவில்லையே என செய்தியாளர் சந்திப்பில் ஆதங்கம் தெரிவித்தார்.

நீங்கள் கேட்கும் கேள்வி ஸ்டுப்பிட் ஆக உள்ளது. என திரும்பத் திரும்ப அவர் செய்த குற்றத்தை சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார் கதாநாயகி

அதற்கு youtuber நீங்கள் என்னை பற்றி பேசியது தவறான செயல் அதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்,
மன்னிப்பு கேட்க மறுத்த கௌரி கிஷன் நீங்கள்தான் என் உடல் எடையை பற்றி பேசி உள்ளீர்கள் எனவே நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பதில் அளித்தார்.

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் செய்தியாளர்கள் சந்திப்பில் யூடியூபர்கள் எழுப்பிய அதீத கேள்விகளால் நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார். இதற்கிடையே கவுரிகிஷனின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, கவுரி தன்னம்பிக்கையுடன் தன் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, உறுதியுடன் எதிர்த்தார் என்பதில் பெருமை அடைகிறோம். ஒரு ஆண் நடிகரிடம் அவரின் உடல் எடை குறித்து யாரும் கேட்கவில்லை. அப்படியிருக்க, ஏன் ஒரு பெண் நடிகையிடம் இத்தகைய கேள்வி கேட்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies