தமிழ்நாடு
'' கட்சி கூட்டம் நடத்த குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னரே அனுமதி '' - தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தகவல்
Nov 06, 2025 01:20 PM
80
அரசியல் கட்சி கூட்டம் நடத்த குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னரே அனுமதி வழங்குவது, ரோடு ஷோவிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளை 3 மணி நேரம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைக்கக்கூடாது என்றும் தமிழக அரசு சார்பில் நெறிமுறைகள் முன்மொழியப்பட்டன.
கட்சி கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத் தொகை வசூலிக்கவும், குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கூட்டம் வந்தால் வைப்புத் தொகை திரும்ப தரப்படாது என்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் விதிமுறைகள் கொண்டுவர அரசு முன்மொழிந்தது.
மேலும், அவசர சேவைகள், பொதுமக்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரோடு ஷோ நடத்துவது உள்பட கூடுதல் விதிமுறைகளை கொண்டுவரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
5,000 பேருக்கு அதிகமாக கூடும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோ, போராட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும் வகையிலேயே வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu