ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
கிரிக்கெட் வீராங்கனைக்கு தமது கையால் உணவு பரிமாறிய பிரதமர் மோடி
Nov 06, 2025 12:51 PM
112
இந்திய கிரிக்கெட் அணியினருடனான சந்திப்பின் போது,பிரதமர் மோடி தமது கையால் உணவு பரிமாறிய சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
டெல்லியில் உள்ள இல்லத்திற்கு வீராங்கனைகளை அழைத்து பாராட்டு தெரிவித்த பிரதமர், அவர்களுடன் இரவு உணவும் அருந்தினார்.
இதில் பிரதிகா ராவல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் வந்து பங்கேற்றார். விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகளை எடுக்க முடியாமல் அவர் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்திருப்பதை கண்ட பிரதமர், தமது கையால் உணவை எடுத்து, பிரதிகா ராவலுக்கு வழங்கினார்.
உணவு பிடித்து இருக்கிறதா, வேறு ஏதாவது எடுத்து தரவா என்றும் பிரதமர் கேட்ட காட்சிகள் இப்போது இணையவாசிகளால் பகிர்ந்து கொண்டாடப்படுகின்றன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu