முகப்பு
பீகாரில் கவனத்தை ஈர்த்துள்ள 5 முக்கிய தொகுதிகள்
Nov 06, 2025 02:25 AM
44
பீகாரில் கவனத்தை ஈர்த்துள்ள 5 முக்கிய தொகுதிகள்
பீகாரில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 5 தொகுதிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றுள், ரகோபூரில் இண்டியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் அவரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமாரும் போட்டியிடுகிறார்கள். அந்த தொகுதியில் இருந்து தான் கடந்த 2 முறையும் தேஜஸ்வி வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.
அடுத்து, மொகாமா தொகுதி. சில நாட்களுக்கு முன் அத்தொகுதியில் போட்டியிடும் ஜன் சுராஜ் வேட்பாளர் பிரியதர்ஷி பியூஷின் உறவினர் கொல்லப்பட்ட வழக்கில், ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனால் அத்தொகுதி பதற்றம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் தொகுதியில் துணை முதலமைச்சரான பா.ஜ.க.வின் சாம்ராஜ் சவுத்ரி, ஆர்.ஜே.டி.யின் அருண் ஷா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேல்சபை உறுப்பினராகவே இருந்த சாம்ராஜ் சௌத்ரி 15 ஆண்டுகளுக்கு பின் இம்முறை தேர்தலில் களம் காணுகிறார்.
அடுத்து, லாலு பிரசாத் யாதவால் ஓரங்கட்டப்பட்ட மகனான தேஜ் பிரதாப் யாதவ் மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் 2015-இல் வெற்றி பெற்றுள்ள தேஜுக்கு ஆர்.ஜே.டி. வேட்பாளர் முகேஷ் குமார் சவால் விடுவார் என கருதப்படுகிறது.
நாட்டுப்புற பாடகரும், பா.ஜ.க.வின் 25 வயது வேட்பாளருமான மைதிலி தாக்கூர் அலிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆர்.ஜே.டி.யின் கோட்டையாக அலிநகர் கருதப்பட்டாலும் மைதிலி தாக்கூர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu