BIG STORIES
“வவ்வாலு ஆட்டம் தாங்கலப்பா” செய்தியாளரை தாக்கி மிரட்டல் பிளாக் மெயில் பெண் கைது..!
Nov 06, 2025 02:23 AM
192
“வவ்வாலு ஆட்டம் தாங்கலப்பா” செய்தியாளரை தாக்கி மிரட்டல் பிளாக் மெயில் பெண் கைது..!
பணம் பறித்த வழக்கில் கைதானது குறித்து செய்தி வெளியிட்டதால் செய்தியாளரை எஸ்.பி அலுவலகத்தில் வைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்திற்குள் வைத்தே செய்தியாளரை தாக்கி பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட பிளாக்மெயில் பெண் ஹேமலதா இவர் தான்..!
கடம்பத்தூரை சேர்ந்தவர் ஹேமலதா. காவல் நிலையத்துக்கு எதிரே ஜூஸ் கடை நடத்திவந்தார். ஹேமலதா சில மாதங்களுக்கு முன்பு ஆண் நண்பர்களுடன் பப்புகளுக்கு சென்று நடனமாடி உற்சாகமாக இருந்து பணம் பறித்ததாகவும், ஒரு நண்பரது வீட்டில் வைத்து பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பிளாக்மெயில் செய்ததாகவும் வழக்கில் சிக்கியதால் கடம்பத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து செய்தி வெளியிட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த நாளில் இருந்து செய்தியாளர் மீது தொடர்ந்து பொய்யான புகார்களை பல்வேறு காவல் நிலையங்களிலும், மனித உரிமை ஆணையத்திலும் கொடுத்து ஹேமலதா மிரட்டல் விடுத்து வந்தார்.
இந்த நிலையில் எஸ்.பி அலுவலகத்தில் நின்றிருந்த செய்தியாளரை கண்டதும், அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆபாசமாக பேசி வம்பிழுத்து தாக்கியதோடு, தனது கூட்டாளியுடன் சேர்ந்து பகிரங்க கொலை மிரட்டலும் விடுத்தார்
அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணையும் அவரது கூட்டாளியையும் அங்கிருந்து செல்லுமாறு கூறிய நிலையில் போலீசாரையும் அவதூறாக பேசினார் ஹேமலதா
இதையடுத்து பாதிக்கப்பட்ட செய்தியாளருடன் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் , ஹேமலதாவின் தொடர் மிரட்டல் குறித்து திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹேமலதாவையும் அவரது கூட்டாளியையும் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu