அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
அமெரிக்காவில் மருந்துகளை ஆர்டர் செய்த பெண்ணுக்கு மனித கைகள் டெலிவரி
Nov 04, 2025 06:20 AM
127
அமெரிக்காவில் மருந்துகளை ஆர்டர் செய்த பெண்ணுக்கு மனித கைகள் டெலிவரி
அமெரிக்காவின் கென்டக்கியில் பெண் ஒருவர் மருந்துகளை ஆர்டர் செய்த நிலையில், பார்சலில் மனித கைகள் டெலிவரி ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஹோப்கின்ஸ்வில்லே என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு பார்சலில் ஐஸ் பேக் செய்யப்பட்ட மனித உறுப்புகள் டெலிவரி ஆனதை அடுத்து அப்பெண் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை அதிகாரி, பார்சலில் வந்த உடற்பாகங்களை கைப்பற்றிச் சென்றார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட மனித பாகங்கள் உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காக நாஷ்வில்லே என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருந்ததாகவும், தவறுதலாக பெண்ணின் வீட்டிற்கு டெலிவரி ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu