முகப்பு
செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் இபிஎஸ் விளக்கம்
Nov 01, 2025 07:57 AM
104
செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் இபிஎஸ் விளக்கம்
செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் இபிஎஸ் விளக்கம்
கடந்த 6 மாதமாக செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் - இபிஎஸ்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்கு விவசாயிகள் சார்பில் எனக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது - இபிஎஸ்
கட்சி சார்பற்ற விவசாயிகளால் எனக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் அதிமுக தலைவர்கள் படம் இல்லை என செங்கோட்டையன் குற்றச்சாட்டு - இபிஎஸ்
ஈரோட்டில் செங்கோட்டையன் கலந்துகொண்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவிலும் அதிமுக தலைவர்கள் படம் இல்லை - இபிஎஸ்
பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் - இபிஎஸ்
பொதுக்குழுவின் தீர்மானத்தை மீறி செங்கோட்டையன் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் - இபிஎஸ்
அதிமுகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - இபிஎஸ்
செங்கோட்டையனின் அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவியையும் ஜெயலலிதா பறித்தார் - இபிஎஸ்
ஜெயலலிதா பறித்த அமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கியவன் நான் - இபிஎஸ்
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து டிடிவி தினகரனை நீக்கியது ஜெயலலிதா - இபிஎஸ்
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரனை கட்சிக்குள் கொண்டுவந்தது சசிகலா - இபிஎஸ்
டிடிவி தினகரன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஜெயலலிதா நீக்கினார் - இபிஎஸ்
அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பதால் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் - இபிஎஸ்
சட்டமன்றம் உள்ளிட்ட எந்த இடத்திலும், திமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் பேசுவதில்லை - இபிஎஸ்
அதிமுகவை பலவீனப்படுத்த யார் முயன்றாலும் அதனை வேடிக்கை பார்க்க மாட்டோம் - இபிஎஸ்
கொடநாடு விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு - இபிஎஸ்
செங்கோட்டையன் வன்மத்துடன் செயல்பட்டு வரும் நிலையில் அவரை கட்சியில் எப்படி வைத்திருப்பது? - இபிஎஸ்
செங்கோட்டையன் தன்னுடன் அடிக்கடி பேசிவருவதாக டிடிவி தினகரனே பலமுறை கூறியிருக்கிறார். - இபிஎஸ்
அதிமுகவுக்கு எதிராகப் பேசினால், விரோதமாகச் செயல்பட்டால் தலைமை வேடிக்கை பார்க்காது - இபிஎஸ்
செங்கோட்டையனை நீக்கியதால், அவரது தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர் - இபிஎஸ்
அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் செங்கோட்டையனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
கட்சிக்காக உழைக்காமல், துரோகம் இழைத்தால் இந்த நிலைதான் ஏற்படும் - இபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ் - இபிஎஸ்
ஓபிஎஸ்-க்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்தும் கட்சிக்கு அவர் உண்மையாகச் செயல்படவில்லை - இபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவர் ஓபிஎஸ் - இபிஎஸ்
திமுகவை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக திட்டமிட்டவர்கள் இப்போது வெளிப்பட்டுவிட்டனர் - இபிஎஸ்
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அதிமுக குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை - இபிஎஸ்
ஜெயலலிதாவே 2014-ல் பதவியை பறித்துவிட்ட நிலையில், செங்கோட்டையனுக்கு எப்படி இரண்டு முறை வாய்ப்பு கிடைத்திருக்கும்? - இபிஎஸ்
முறையான தேர்தல் மூலம் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் - இபிஎஸ்
நான் தற்காலிக பொதுச்செயலாளரா, நிரந்தர பொதுச்செயலாளரா என்பது அனைவருக்கும் தெரியும் - இபிஎஸ்
திமுகவை ஆட்சியில் அமர்த்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் செயல்படுகின்றனர் - இபிஎஸ்
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்திருப்பாரா? - இபிஎஸ்
ஈரோடு பகுதியில் சிற்றரசர் போல் செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu