உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
BIG STORIES
ECR-ல் சிறுமியுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ.. அத்தையின் செல்போனில் ஆதாரங்கள்.. தீராத விளையாட்டு வில்லன்... ஓயாத அடுக்கடுக்கான புகார்கள்!
Oct 15, 2025 05:13 AM
434
ECR-ல் சிறுமியுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ.. அத்தையின் செல்போனில் ஆதாரங்கள்.. தீராத விளையாட்டு வில்லன்...
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா என்ற பெயரில் ஒரு லெட்டர் பேடு அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக உள்ளார்.
கோடம்பாக்கம் ஸ்ரீ என கூறிக்கொள்ளும் இவருக்கு சர்ச்சைகள் புதிதல்ல. பாலியல் புகார்கள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளுடன் கூட்டு, அண்டர்கிரவுண்ட் டீலிங் என ‘கோடம்பாக்கம் ச்சீ...’ என்று அழைக்கும் அளவுக்கு அடிக்கடி சிக்குவதும், தப்புவதும் வாடிக்கை. ஆனால், இந்த முறை அடங்காத வக்கிர ஆசையால் போலீசிடம் வசமாக சிக்கியிருக்கிறார், கோடம்பாக்கம் ஸ்ரீ.
அதாவது, கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த பெண், இவரது வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது சகோதரர் மகளான 13 வயது பள்ளிச் சிறுமியை, கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தனின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து கோடம்பாக்கம் ஸ்ரீ, அந்த பள்ளிச் சிறுமி மீது வக்கிரப் பார்வையை வீச ஆரம்பித்துள்ளார். சிறுமியின் அத்தையிடமும் அச்சிறுமியின் மீதான வக்கிர ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 3 முறை சிறுமியின் அத்தை, ஆசை வார்த்தைகளைக் கூறி ECR ல் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று கோடம்பாக்கம் ஸ்ரீக்கு சிறுமியுடன் இருக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.
அப்போது கோடம்பக்கம் ஸ்ரீ அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது 17 வயதாக உள்ள அந்த சிறுமி இரு தினங்களுக்கு சென்னை வந்த நிலையில், சிறுமியை அவரது அத்தை தனது வீட்டில் தான் தங்க வேண்டும் என சண்டையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சிறுமி வேலூரில் வசிக்கும் தனது தாயாரிடம் , ஏற்கனவே தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயார், தியாகராய நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், தனது அத்தை தன்னை கோடம்பாக்கம் ஸ்ரீயுடன் இருக்க ஆசை வார்த்தைகளைக் கூறி வற்புறுத்தியதாகவும், கோடம்பாக்கம் ஸ்ரீ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி பகீர் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், அத்தை, தன்னை கட்டாயப்படுத்தி ஆண்களுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து ப்ளாக்மெயில் செய்து மிரட்டி வருவதாகவும் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த புகாரானது, இணை ஆணையர் கவனத்துக்கு வந்ததும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்படி உடனடியாக சிறுமியின் அத்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பின் அவரையும் கைது செய்தனர்.
குறிப்பாக, சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதால், அவரது அத்தையின் செல்போன் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோடம்பாக்கம் ஸ்ரீக்கு பாலியல் புகார்கள், சர்ச்சைகள் புதிதல்ல. இத்தனைக்கும் 2021 காலக்கட்டத்தில் தான் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், 2020 ஆம் ஆண்டே கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, இவரது அமைப்பின் மகளிர் அணியில் மாநிலச் செயலாளர் பதவி வகித்த பெண் நிர்வாகி, சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமறைவானார்.
அதுவும், "அரசியல் தலைவர்கள் உன்னை கை விட்டுவிடுவார்கள்.. நான் உன்னை எப்பவுமே கைவிடமாட்டேன் செல்லம்" என்று பாஜக பெண் நிர்வாகியிடம் கோடம்பாக்கம் ஸ்ரீ பேசும் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், "ஸ்ரீ எனக்கு பாலியல் இம்சை தந்தார்.. டெல்லி போகும்போதெல்லாம் என்னையும் அழைத்துக்கொண்டு போவார்.. என்னை பிடித்திருப்பதாக சொன்னார்.. திருமணம் செய்துகொள்வதாக சொன்னார்.. அவரால் நிறைய தொல்லையை அனுபவித்தேன்" என்றும் பெண் நிர்வாகி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்
அதாவது, கோடம்பாக்கம் ஸ்ரீ மீது பிரிவு 509 (ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்), 354 A (பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) மற்றும் ஐபிசியின் பிற விதிகள் மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்தப் பெண் 2016 இல் மகாசபாவில் சேர்ந்தார். ஸ்ரீக்கு இந்தி புரியாததால், அவர் டெல்லிக்குச் சென்று கட்சி கூட்டங்களில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மாநில மகளிர் பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கோடம்பாக்கம் ஸ்ரீ விரும்பத்தகாத பாலியல் வன்கொடுமைகளைச் செய்ததாக புகார்தாரர் குற்றம் சாட்டினார். அவரது தவறான நடத்தையால் வருத்தமடைந்த அவர், வாட்ஸ்அப் மூலம் தனது ராஜினாமாவை அனுப்பினார் என தகவல் வெளியானது.
அப்போது, கோடம்பாக்கம் ஸ்ரீயின் மனைவி நான்சியோ, தனது கணவர் அப்பாவி என்றும் தனது கணவர் அந்த பெண் நிர்வாகிக்கு நிறைய பண உதவிகளை செய்தததாகவும் அதை திருப்பி கேட்டதாலும் மோசமான நடவடிக்கைகளால் அகில இந்திய இந்து மகாசபா அமைப்பிலிருந்து நீக்கியதாகவும் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய்ப்புகார் அளிக்கப்பட்டது என புகாரில் தெரிவித்தார்.
மேலும், புகார் அளித்த பெண்ணின் மீது கொலை வழக்கு இருப்பதாகவும் பிணை ஆணையை வைத்து ஏமாற்றியதாகவும் நான்சியின் தரப்பு குற்றம்சாட்டியது.
2020 காலக்கட்டத்தில் இப்படியொரு பாலியல் புகாருக்குள்ளாகி, தலைமறைவு ஆகும் அளவுக்கு ஓடி ஒளிந்திருக்கிறோமே என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாத கோடம்பாக்கம் ஸ்ரீ அடுத்த ஒரு வருடத்திலேயே அதாவது 2021 ஆம் ஆண்டிலேயே பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பதாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மத தலைவராக காட்டிக்கொள்ளும் கோடம்பாக்கம் ஸ்ரீ, கடந்த 1999 ஆம் ஆண்டு நான்சியை காதலித்து திருமணம் செய்தபோது, தனது பெயரை பிளிப் ஸ்ரீகண்டன் என கிறிஸ்தவ பெயரில் ரிஜிஸ்டர் செய்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பெட்ரோல்த்துறை அமைச்சரை எனக்கு தெரியும் என்று இன்டியன் கேஸ் ஏஜெண்ஜி வாங்கி தருவதாக கூறி கோயம்பத்தூரை சேர்ந்த கெளதமன் என்பவரை 20 லட்சம் ஏமாற்றியுள்ளார் எனவும் புகார் எழுந்தது.
இதனிடையே, சுரேஷ் என்பவருக்கு , இலங்கை வாழ் மக்களை குடியுரிமை பெற்று தருவதாக ஸ்ரீயிடம் அழைத்து வந்து, அமித்ஷாவுடன் நெருக்கமான தொடர்புடையவர் என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இவரை பற்றி புகார் கொடுத்தவர்கள், வழக்கு தொடுத்தவர்களை மிரட்டி வருகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீதான மற்ற புகார்கள் குறித்தும் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது, காவல்துறை.
இப்படி, பாலியல் புகார்கள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிஸம், மிரட்டல்கள் என பல்வேறு புகார்கள், சர்ச்சைகளில் சிக்கி தப்பி வந்த கோடம்பாக்கம் ஸ்ரீ தனது அடங்காத வக்கிர வெறியால், சிறுமியின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து செய்யப்பட்டதால் சிறைபறவையாகி இருக்கிறார்.
கோபத்தில் செய்தாலும், மோகத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu