கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
சற்றுமுன்
"கரூர் விவகாரத்தில் முழு பொறுப்பெடுத்து அதிகாரிகளிடம் அறிக்கை பெறவும்"... தமிழக முதலமைச்சருக்கு பாஜக எம்.பிக்கள் குழு சார்பில் அனுராக் தாக்குர் கடிதம்
Oct 03, 2025 08:44 AM
109
"கரூர் விவகாரத்தில் முழு பொறுப்பெடுத்து அதிகாரிகளிடம் அறிக்கை பெறவும்"... தமிழக முதலமைச்சருக்கு பாஜக எம்.பிக்கள் குழு சார்பில் அனுராக் தாக்குர் கடிதம்
கரூர் விவகாரத்தில், முழு பொறுப்பெடுத்துக்கொண்டு நெரிசலுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடமிருந்து விரைவில் அறிக்கை பெறுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.பிக்கள் குழு சார்பில் அனுராக் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில், ஹேமமாலினி தலைமையில் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பாஜக எம்.பிக்கள் குழு அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் தாக்கூர் எழுதியுள்ள கடிதத்தில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணிகள் பற்றி அரசு விரைவில் கண்டறியுமாறு முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன, அரசின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்ட நெரிசலுக்கான காரணங்கள் எவை என்று தெரிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளப் போகும் திட்டங்கள் என்ன என்றும் அனுராக் தாக்குர் வினவியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu