மின்கசிவு காரணமாக பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
Mar 10, 2026
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026
முகப்பு
பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வரும் கல்லூரி மாணவி..!
Oct 03, 2025 12:27 PM
42
பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வரும் கல்லூரி மாணவி..!
தஞ்சை மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கருப்பு கவுனி உள்ளிட்ட 21 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வரும் யாழினி என்ற கல்லூரி மாணவி, இந்த ஆண்டு ரத்த சாலி என்ற மருத்துவ குணம் கொண்ட நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மண்புழு உரம், மாட்டு சாணம், பஞ்ச காவியம் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாக கூறிய யாழினி, ரத்தசாலி நெல் ரகம் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி வளரக் கூடியது என்றும் மற்ற ரகங்களை விட மகசூல் குறைவாக இருந்தாலும் விலை அதிகம் என்றும் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu