ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் வசதி இல்லை எனப் புகார்.. மூச்சுத் திணறலால் இறந்தவரின் உறவினர்கள் முறையீடு..!
Sep 30, 2025 05:51 AM
116
ஆக்சிஜன் வசதி இல்லை எனப் புகார்
சென்னையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் ஆம்புலன்சில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற அந்நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துடிப்பு நிற்கும் தருவாயில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது. சற்று நேரத்தில் ராஜேஷ் உயிரிழந்தார்.
ஆம்புலன்சில் ராஜேஷை கூட்டிச் சென்ற போது, அவருக்கு ஆக்சிஜன் வைக்குமாறு ஊழியர்களிடம் அவரது சகோதரி கேட்டதாகவும், ஆனால் ஆக்சிஜன் இல்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் வைக்காததே ராஜேஷ் இறப்புக்கு காரணம் என்றும் அது தொடர்பாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu