BIG STORIES
"அப்படி ஒரு கூட்டம்.. இப்படி ஒரு சம்பவம்" எப்படி நடந்தது என விவரிக்கும் பொதுமக்கள்..!
Sep 30, 2025 01:44 AM
5312
அப்படி ஒரு கூட்டம்.. இப்படி ஒரு சம்பவம்
கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்களாக இல்லாமல், பார்வையாளராக கலந்துகொண்டு, அன்று நடந்த சம்பவத்தை பொதுமக்கள் பலர் விவரித்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் வாகனம் நுழைந்தது தொடங்கி, அது புறப்பட்டுச் செல்லும் வரையிலான தருணம் வரை அரங்கேறிய சம்பவங்களை நேரில் பார்த்த பெண் ஒருவர், எங்கே நடந்தது தவறு, எப்படி நடந்தன உயிரிழப்புகள், என ஆதங்கத்தோடு விவரித்தார்.
பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்திருந்த த.வெ.க தொண்டர்கள் நடந்து கொண்ட விதத்தை தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையத்திடம் விவரித்த ஒருவர், தொண்டர்கள் டிரான்ஸ்பார்மர்களில் ஏறுவதைக் கண்டு, தவெக நிர்வாகிகள்தான் மின்சாரத்தைத் துண்டிக்கச் சொன்னதாகக் கூறினார்.
கைக்குழந்தையை வைத்திருந்த பெண் தொடங்கி, 2 வயது சிறுவன் வரை தன் கண்முன்னால் பலர் கீழே விழுந்து, நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறி இறந்ததை பெண் ஒருவர் அழுகையுடன் விவரித்தார். விஜய் சென்ற திசைக்கு எதிர் திசையில் நெரிசல் ஏற்பட்டது சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறிய அவர், யாரோ வேண்டுமென்றே செய்தது போல் உள்ளதாகக் கூறினார்.
பிரச்சாரம் நடைபெற்ற இடத்துக்கு விஜய் வருவதற்கு முன்னமே, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்துவிட்டனர் என்றும் அவர்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டு ஓடினார்கள் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சிறுமி, நடுக்கத்துடன் விவரித்தார்.
வேலுச்சாமிபுரத்திலேயே வசிக்கும் பெண் ஒருவர், வெளியூரிலிருந்து வந்திருந்த பெண்கள் பலர், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகளுக்குத் தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்தனர் என்றும் தாங்கள் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து உதவியதாகவும் கூறினார். தனது கண் முன்னே பலர் கீழே விழுந்து மயங்கியதைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
விஜய்யின் பிரச்சார வாகனத்தின் பின்னால் ஓடிய கூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தனர்.
5 நிமிடங்களில் பல அசம்பாவிதங்கள் நடந்து முடிந்துவிட்டதாகக் கூறிய த.வெ.க நிர்வாகி ஒருவர், கூட்டத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியின்போது போலீசாரின் தடியடியில் சிக்கித் தாமும் மயக்கமுற்றதாக அழுகையுடன் கூறினார்.
கரூரில் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடவியல் நிபுணர்களிடம், தாம் கண்ட காட்சியை பதற்றம் மாறாமல் ஒருவர் விவரித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu