RECENT NEWS

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

Feb 09, 2026

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

Feb 09, 2026

முகப்பு

வல்லரசு நாடுகளை மிரள வைத்த இந்தியா.. ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை..! அக்னி பிரைம் ஏவுகணை சிறப்புகள் என்ன?

Sep 26, 2025 04:18 PM

201

வல்லரசு நாடுகளை மிரள வைத்த இந்தியா.. ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை..! அக்னி பிரைம் ஏவுகணை சிறப்புகள் என்ன?

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை..! அக்னி பிரைம் ஏவுகணை சிறப்புகள் என்ன?

இந்தியாவிலேயே முதன்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் அக்னி ஏவுகணை ஏன் ரயிலில் இருந்து ஏவப்பட்டது? வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் அதன் திறன் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்த ஏவுகணைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து, அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் டிஆர்டிஓ, வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில், அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து அசத்தியுள்ளது.

முதன் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அக்னி-1, அக்னி-2 வரிசையில், மேம்படுத்தப்பட்ட பதிப்பான அக்னி பிரைம் எடை குறைவாகவும், கையாள எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ரயில், சாலை போன்ற பல்வேறு தளங்களில் இருந்தும் ஏவும் வகையில், சிறப்பு மிக்க நகரும் ஏவுதள அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கேனிஸ்டர் எனப்படும் சிறப்பு கொள்கலனில் இந்த ஏவுகணை வைக்கப்பட்டுள்ளதால், இதனை ரயில்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் எளிதாக ஏற்றிச் செல்ல முடியும்.

இத்தகைய சிறப்புவாய்ந்த திட்டத்திற்கு முன்னோடியாக சோவியத் யூனியன் இருக்கிறது. 1980-களில், RT-23 Molodets என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ரயில் அடிப்படையிலான அமைப்பில் சோவியத் யூனியன் நிலைநிறுத்தியது. பனிப்போர் சமயத்தில், அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தங்கள் அணு ஆயுத ஏவுகணைகளை மொபைல் கேனிஸ்டர் அமைப்பில் வைத்து ரயில்களிலும், சாலைகளிலும் நகர்த்தி வந்தது சோவியத் யூனியன்.

அதைத்தொடர்ந்து தாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல, என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்கா கடந்த 1980களில் 'Peacekeeper Rail Garrison' என்ற திட்டத்தின் கீழ், சுமார் 25 ரயில்களை உருவாக்கியது. எதிரி நாடுகளிலிருந்து அச்சுறுத்தல் அதிகரிக்கும்போது, ராணுவத் தளங்களிலிருந்து வெளியேறி, மற்ற ரயில்களுடன் இந்த ரயில்கள் ஒன்றாக பயணிக்கும். இதன் மூலம், ஏவுகணைகளின் இருப்பிடத்தைக் எதிரி நாடுகள் கண்டறிவது தடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சீனாவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் DF-41 ஏவுகணைகளை கேனிஸ்டர் அமைப்பில் வைத்து வெற்றிகரமாக சோதித்தது. ரயில் அடிப்படையிலான ஏவுகணை சோதனைகளில், தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் வடகொரியா, கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து ரயிலில் இருந்து ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியது.

இதுவரையில் பாதுகாப்புத் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில், அதற்கு நிகராக இந்தியாவும் தற்போது அக்னி ஏவுகணையை ஏவி சாதனை படைத்துள்ளது.
இந்த ஏவுகணை 2,000 கி.மீ., வரையிலான தொலைவை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு அதிநவின மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில் லாஞ்சர் மூலம், எவ்வித தடையுமின்றி எந்த பகுதிக்கும் கொண்டு செல்ல முடியும். அதுமட்டுமின்றி தெரிவுநிலை குறைந்த பகுதியிலும், குறுகிய நேரத்தில் எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்றே கூறலாம்...

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies