ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
முகப்பு
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு - நாளை முதல் நாடு முழுவதும் அமல்
Sep 21, 2025 10:13 AM
98
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு
புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் வரிக் குறைப்பு நாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகின்றன.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு அறிவிப்பால் சுமார் 353 பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிக் குறைப்பால் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டாலும், பணப் புழக்கம், உள்ளூர் நுகர்வு, அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
5 விதமாக இருந்த வரி விதிப்பு முறை 5, 18 மற்றும் 40 சதவீதம் என மூன்றுவிதமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பால் பொருள்கள், புத்தகம், பென்சில், காப்பீடு, புற்றுநோய் உள்ளிட்ட 33 உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவை மீதான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய், சோப்பு, நெய், சர்க்கரை, சாக்லேட், பிஸ்கட், உலர் பழங்கள், சைக்கிள், காலணிகள், உரங்கள், வேளாண் பொருள்கள் உள்ளிட்டவை மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வாஷிங் மெஷின், தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், இருசக்கர வாகனங்கள், சிமெண்ட் உள்ளிட்டவை மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பனேட்டடு குளிர்பானங்கள், SUV மற்றும் சொகுசு கார்கள், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீது 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu