BIG STORIES
விஜய்க்காக முண்டியடித்த பெண்கள் கூட்டத்திற்குள் நகை பறித்த மர்ம கும்பல்..!நையப்புடைத்த தவெகவினர்
Sep 21, 2025 02:01 AM
155
நாகப்பட்டினத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தனது பிரச்சார வாகனத்தில் சென்ற தவெக தலைவர் விஜய்யை பார்க்க வந்த பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றவனை மடக்கிப்பிடித்த தவெகவினர் நைய்யப்புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்
தவெக கூட்டத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய கும்பலை சேர்ந்த வட மாநில நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து நையப்புடைக்கும் காட்சிகள் தான் இவை..!
தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாகப்பட்டினம் வருகிறார் என்றதுமே காலை முதலே நாகை புத்தூர் ரவுண்டானாவில் விஜய்யை காணவேண்டும் என்று பெண்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்
விஜய்யின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்த பெண்கள் சிலர் வயது பேதமின்றி உற்சாக நடனமாடினர்
நேரம் செல்ல செல்ல கூட்டம் அலை மோத தொடங்கியது இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகின்றது.
அந்தப்பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவன் என ஒருவரை மடக்கிப்பிடித்த தவெகவினர் அவரை அடித்து உதைத்தனர் அவரிடம் தங்க சங்கிலி இல்லை,
அடி தாங்காமல், அவர் வலிப்பு வந்தது போல நடித்த நிலையில் அவரை இழுத்துச்சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்
உடன் வந்தவர்கள் தங்க சங்கிலியுடன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டதாக கண்ணீர் விட்ட பாதிக்கப்பட்ட பெண், “என் பெண்ணுக்கு என்று சேர்த்து வைத்தது சார், எப்படியாவது விஜய் கிட்ட சொல்லி நகையை வாங்கிக்கொடுங்க என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்
அதே போல விஜய்யின் பிரச்சார வாகனம் கூட்டத்துக்குள் வந்ததும் ஏற்பட்ட நெரிசலால் 10க்கும் மேற்பட்ட பெண்கள் அடுத்தடுத்து மயங்கி சரிந்தனர்
மயங்கி விழுந்த பெண்களை கூட்டத்திற்கு வெளியே தூக்கிச்சென்று தவெகவினர் முதல் உதவி சிகிச்சை அளித்து அசுவாசப்படுத்தினர்
குறிப்பாக பெண்கள் , குழந்தைகள் கூட்டத்திற்கு வர வேண்டாம் , வீட்டில் இருந்த படியே தனது பேச்சை கேட்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் , விஜய்யை நேரில் பார்க்க வந்த பெண்கள் கூட்ட நெரிசலால் சில அசவுகரியங்களுக்கு ஆளானதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் விஜய்யை பார்த்து விட்ட சந்தோஷத்தில் சில பெண்கள் உற்சாகமாய் துள்ளிக்குதித்த நிகழ்வுகளும் அரங்கேறியது
சில பெண்கள் விஜய்யை பார்த்து கைஅசைத்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சிகளையும் காண முடிந்தது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu