தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்.! ஸ்தம்பித்த மலைக்கோட்டை மாநகர்.! 8 கி.மீ செல்ல 5 மணி நேரம் ஆனது.!
Sep 14, 2025 04:01 PM
79
திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்.! கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பித்த மலைக்கோட்டை மாநகர்.!
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜய் வருகையின்போது, கூடுதலாக, மத்திய பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்தபோது உற்சாக முழக்கமிட்ட த.வெ.க தொண்டர்கள், விஜய் சென்ற பிரச்சார பேருந்தை சூழ்ந்து கொண்டு, விண்ணதிர முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். விமான நிலைய வளாகத்தில் சேதமும் ஏற்பட்டது.
சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட், ஹெட் போஸ்ட் ஆபீஸ், மேலப்புதூர் வழியாக மரக்கடைக்குச் சென்ற விஜய்க்கு, வழிநெடுகிலும், த.வெ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காவல்துறையின் நிபந்தனை மீறி, இருசக்கர வாகனங்களிலும், கூட்டம், கூட்டமாகவும், தொண்டர்கள் பின்தொடர்ந்ததால், கூட்ட நெரிசலில், விஜய்யின் பிரச்சார பேருந்து சிக்கியது. ஏர்போர்ட்டில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வருவதற்கே சுமார் 3 மணி நேரம் ஆனது. பின்னர், டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து குட்செட் மேம்பாலம், பாலக்கரை வழியாக, மரக்கடைக்கு விஜய் வருவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது.
பாலக்கரை பாலத்தில் விஜய் பேருந்து ஏறிய போது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அந்த சமயத்தில் பேருந்தை நகர்த்த முயன்ற போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நிற்க முடியாத தொண்டர்கள் பாலத்தின் சுவர் மீது ஏறிக்குதித்து தப்பினர்.
காலை 9.50 மணிக்கு நகரத் தொடங்கிய விஜய்யின் பிரச்சார பேருந்து, பிற்பகல் 3 மணிக்கே, மரக்கடைக்கு வந்தடைந்தது. அங்கும் ஏராளமானவர்கள் திரண்டிருந்த காரணத்தினால் விஜய் பேசும் இடத்தை அடைவதற்கு நீண்ட நேரம் ஆனது. இதனை அடுத்து பேருந்தின் மீது ஏறி விஜய் பேச ஆரம்பித்தார். ஆனால் சில நிமிடங்களிலேயே ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை. அதனை சரி செய்ய இயலாத காரணத்தினால் விஜய் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை.
சுமார் 15 நிமிடங்களில் தனது பிரச்சார உரையை முடித்த விஜய், மரக்கடையில் இருந்து, காந்தி மார்க்கெட், பால்பண்ணை வழியாக, திருச்சி-சென்னை பைபாஸ் வந்தடைந்து, அரியலூர் சென்றார்.
விஜய் பிரச்சார வாகனம் வந்த வழித்தடங்களிலும், பாலக்கரை மற்றும் மரக்கடையில் ஏற்பட்ட நெரிசலிலும் சிக்கி, 15க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அதில் ஒருசிலர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu