மின்கசிவு காரணமாக பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
Mar 10, 2026
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026
முகப்பு
கஞ்சா போதையில் போலீசாரைத் தாக்கிய கும்பல்..! உடலை பிளேடால் கிழித்து ரகளை ..
Sep 11, 2025 07:12 AM
80
கஞ்சா போதையில் போலீசாரைத் தாக்கிய கும்பல்..!
சென்னையைத் தொடர்ந்து திண்டிவனத்திலும் கஞ்சா போதை கும்பல் ஒன்று போலீசாரைத் தாக்கி, காவல் நிலையத்துக்குள் ரகளை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழே பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளிடம் கஞ்சா போதையில் வம்பிழுத்த ஒரு கும்பல் தகவலறிந்து சென்ற முருகைய்யன் என்ற காவலரையும் தாக்கியுள்ளது. கூடுதல் போலீசார் வருவதை அறிந்ததும் தப்பியோடியுள்ளனர்.
அவர்களில் ராஜேஷ் என்பவனை மட்டும் விரட்டிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனை அறிந்த அவரது மனைவி மனோகரியும் தப்பியோடிய மற்ற மூவரும் காவல் நிலையத்துக்குச் சென்று அவரை விடுவிக்கக் கோரி வாக்குவாதம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் ஆளுக்கொரு பிளேடை வைத்துக் கொண்டு வயிறு, மார்பு, கழுத்து என கீறிக் கொண்டு போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த ரகளையின்போது, திடீரென காவல் நிலையத்தை விட்டு வெளியே ஓடிய ராஜேஷ், தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலத்தின் மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்தவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
போதை தெளியட்டும் என மற்ற நால்வரையும் விடுவித்த போலீசார், காலை மனோகரி உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu