தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை
Aug 31, 2025 05:39 AM
54
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை
சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை, வர்த்தகம், பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பேச்சுவார்த்தையின்போது பிரதமர் தெரிவித்தார்.
எல்லை மேலாண்மை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், எல்லையில் மோதல் நிறுத்தப்பட்டதற்குப் பிறகு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல் உருவாகியுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu