RECENT NEWS

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

முகப்பு

போதையில் மணப்பெண்ணை ஆட அழைத்த மாப்பிள்ளை நண்பர்கள்..! திருமணம் நின்றதால் மாப்பிள்ளை தவிப்பு..! குடி வாங்கி கொடுத்த பாவத்துக்கு செஞ்சிட்டாங்க

Aug 30, 2025 05:38 AM

1193

போதையில் மணப்பெண்ணை ஆட அழைத்த மாப்பிள்ளை நண்பர்கள்..! திருமணம் நின்றதால் மாப்பிள்ளை தவிப்பு..! குடி வாங்கி கொடுத்த பாவத்துக்கு செஞ்சிட்டாங்க

வரவேற்பில் வம்பிழுத்த மாப்பிள்ளையின் குடிகார நண்பர்கள்.. மணப்பெண்ணை நடனமாடச் சொன்னதால் திருமணம் நிறுத்தம்

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் திருமண வரவேற்பில் மது அருந்திவிட்டு நடனமாடும் கும்பல் மாப்பிள்ளையை ஆட சொல்லி தூக்கி விட மாப்பிள்ளை ஒரு குத்தாட்டத்தை போட்டு டஃப் கொடுப்பார்


நிஜத்தில் இதே போல மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையுடம் ஆடச் சொல்லி அடம் பிடித்த மாப்பிள்ளையின் குடிகார நண்பர்களால் ஒரு திருமணமே நின்று போன சம்பவம் அரங்கேறி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காந்திகுப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பணகமுட்லு கிராமத்தை இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் காவேரிப்பட்டணத்தில் உள்ள எஸ்.எம். கல்யாணி திருமண மண்டபத்தில் கடந்த 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

திருமணத்திற்கு முதல் நாள் 26ம் தேதி மாலை அந்த மண்டபத்தில திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். இரவு 10 மணி அளவில் மணமகனின் நண்பர்கள் சிலர் விருந்தை சிறப்பிக்க மது போதையில் மண்டபத்திற்கு வந்து நடனம் ஆடியதாக கூறப்படுகின்றது.

மேடையில் ஏறி முதலில் மாப்பிள்ளையை நடனம் ஆட சொன்னதாகவும், அவரை தொடர்ந்து மணப்பெண்ணையும் எழுந்து நடனமாட சொல்லி அடம்பிடித்ததாக சொல்லப்படுகின்றது. மணப்பெண் இது போன்று நடனமாடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி நடனமாட மறுத்துள்ளார். பெண்ணின் உறவினர்களும் இது போல எங்கள் வீட்டு பெண்ணை நடனமாட சொல்வது தவறு என்று கூறி நடனமாடியவர்களை கண்டித்ததாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் வீட்டாரை மணமகனுடன் வந்த சிலர் தாக்கியதாகவும், இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண், “ திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்து கொள்கிறார்களே, இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்ன ஆகும் ?” என கூறி அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனக்கு திருமணமும் வேண்டாம் இந்த மாப்பிள்ளையும் வேண்டாம் என்று கூறி மணப்பெண் இறங்கிச்சென்றதால் வரவேற்புடன் திருமணம் நின்று போனது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.

இதனிடையே காலை திருமணத்திற்கு சென்று கொள்ளலாம் என எண்ணி மண்டபத்திற்கு சென்றவர்கள். காலையில் மண்டபம் பூட்டப்பட்டிருந்த தகவல் அறிந்து விசாரித்த போது, வரவேற்பில் ஏற்பட்ட பிரச்சினையில் திருமணம் நின்றது தெரியவந்தது. மூக்கு முட்ட மது வாங்கிக் கொடுத்த பாவத்துக்கு, குடிகார நண்பர்களால் திருமணம் நின்று போனதால் மாப்பிள்ளை தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies