RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

முகப்பு

ரிதன்யாவை மிஞ்சிய கொடூரம்.. உணவு கொடுக்காமல், வீட்டில் சிறை...எலும்புக்கூடான மருமகள் மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்..!

Aug 28, 2025 01:23 PM

390

ரிதன்யாவை மிஞ்சிய கொடூரம்.. உணவு கொடுக்காமல், வீட்டில் சிறை...எலும்புக்கூடான மருமகள் மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்..!

ரிதன்யாவை மிஞ்சிய கொடூரம்; எலும்புக்கூடாக மருமகள்...! மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்!

திருப்பூரைச்சேர்ந்த ரிதன்யா கணவர் மற்றும் மாமனார்- மாமியார் குடும்பத்தினரால் கொடூர சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியெடுக்க, பல்வேறு மாநிலங்களில் ரிதன்யாவைப்போலவே கணவர் வீட்டாரின் சித்திரவதைகளால் உயிரை மாய்த்துக்கொள்வது, படுகொலை செய்யும் சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
சமீபத்தில், நொய்டாவில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்பாகிக்கொண்டிருக்க, அடுத்து இன்னொரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திராவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, லட்சுமி பிரசன்னா என்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்மம் மாவட்டம் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த லட்சுமி பிரசன்னா, கானகான்பேட்டையைச் சேர்ந்த பூலா நரேஷ் பாபு என்பவரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின்போது வரதட்சணையாக இரண்டு ஏக்கர் மாம்பழத் தோட்டங்கள், அரை ஏக்கர் விவசாய நிலம், ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

திருமணமானதும் அஸ்வராவ்பேட் பகுதிக்கு குடிபெயர்ந்த, லட்சுமி பிரசன்னாவின் வாழ்க்கை பெரும் துயரமாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சுமி பிரசன்னா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும், அவரை தொடர்பு கொள்ளக்கூட விடாமல் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், செல்ஃபோன் பயன்படுத்துவதைத் தடுத்ததாகவும் பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

"அவள் உள்ளே அடைக்கப்பட்டாள், எங்களைப் பார்க்கவோ அல்லது எங்களுடன் பேசவோ அனுமதிக்கப்படவில்லை. கூடுதல் வரதட்சணை கேட்டு அவளை பட்டினி போட்டு கொன்றார்கள்" என அவளுடைய பெற்றோர் தெரிவித்ததுதான், இந்தியா முழுக்க பெண்களை வரதட்சணை எப்படியெல்லாம் கொன்று தின்கிறது என்கிற பேரவலத்தையும் பெருவலியையும் வெளிப்படுத்தி, இந்திய மனசாட்சிகளை உலுக்கியெடுத்திருக்கிறது.

லட்சுமி தொடர்ந்து கணவன் வீட்டாரால் கண்காணிக்கப்பட்டு மன ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானதாகவும் அவரது தாயார் குற்றம் சாட்டினார். "யாருடனும் பேசக்கூடாது என்பதற்காக அவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர். லட்சுமியின் சகோதரர்கள் பார்க்க செல்லும்போதெல்லாம், 'யாரும் இங்கு வரக்கூடாது' என்று கூறுவார்கள். யாராவது வந்தால் அவள் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று மிரட்டியிருக்கிறார்கள். உனது வீட்டார் யாராவது வந்தால் உனது குழந்தையையும் துன்புறுத்துவோம் என மிரட்டியதால், தன் குழந்தையின் பாதுகாப்பிற்காக பயந்தாள். அதனால்தான், அவள் அங்கேயே இருந்தாள் என்று பகீரிடவைக்கிறார்கள். இன்று வரை எங்கள் மகளை நாங்கள் பார்க்கவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு அவளை எங்களிடமிருந்து அழைத்துச் சென்றார்கள்”என்று அவரது பெற்றோர்கள், கண்ணீர் வடிக்கின்றனர்.

சனிக்கிழமை, லட்சுமி பிரசன்னா படிக்கட்டில் இருந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது கணவர் தனது மாமியார் உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர் ராஜமஹேந்திரவரம் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, ​​புதிய மற்றும் பழைய காயங்களுடன் தங்கள் மகள் எலும்புக்கூடு நிலையில் இருப்பதைக் கண்டனர்.

பரிதாபமாக உயிரிழந்த லட்சுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகாரில் நரேஷ் பாபு, அவரது தாயார் விஜயலட்சுமி, சகோதரி தாசரி பூலட்சுமி மற்றும் மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோர் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் காவல்நிலைய எஸ்.ஐ ஒருவர் கூறும்போது, "சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

நரேஷ் பாபுவின் மைத்துனர் குற்றச்சாட்டுகளை மறுத்தார், லட்சுமி பிரசன்னா ரத்த சோகை மற்றும் தைராய்டு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பட்டினி மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்தார்.

அவரது கணவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “என் மனைவி இறந்துவிட்டார். ஆனால் என் மாமியார் அவரது மரணத்திற்கு என்னைக் குறை கூறுகிறார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால், அவரே உண்மையை வெளிப்படுத்தியிருப்பார். கடந்த காலத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒருபோதும் அவளைப் பற்றி கவலைப்படவில்லை. இப்போது, ​​அவரால் இனி பேச முடியாதபோது, ​​அவர்கள் எங்கள் மீது பட்டினி மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். நான் குற்றமற்றவன் என்று நான் எப்படி நிரூபிக்க முடியும்? அது அவளுடைய தந்தையின் தவறு என்று அவளே தனது கிராம மக்களிடம் கூறியிருந்தாள். இதுபோன்ற சூழ்நிலைகளில், நாங்கள் எப்படி நீதி தேடுவது?” என்று அவர் கூறினார்.

நான் குற்றமற்றவன் என்று நான் எப்படி நிரூபிக்க முடியும்? என கணவர் கேள்வி எழுப்புகிறார். லட்சுமி பிரசன்னாவுக்கு ரத்தசோகையோ, தைராய்டு உள்ளிட்ட பிரச்சனையோ இருந்திருந்தால் சிகிச்சை அளித்ததற்கான ஆதாரங்களை காண்பித்தாலே, இந்த சந்தேக மரணத்திலிருந்து விடுவித்துக்கொள்ளமுடியுமே? அதேபோல், பெண் வீட்டார் தனது மகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், சி.சி.டி.வி. பொருத்தப்பட்டு மகள் கண்காணிக்கப்பட்டு வந்தார் என்ற விவரங்கள் எப்படி தெரிய வந்திருக்கும்? தன்னுடைய மகளை பார்க்க அனுமதிக்கவில்லை, கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டாள் என எப்படி குற்றம் சாட்டுவார்கள்? எனவே தீர விசாரித்தால், உண்மை வெளிவரும் என்கிறார், விசாரணை அதிகாரிகள்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies