ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
சோழர் பெருமைகளை பிரதமர் பேசியதை தமிழனாக வரவேற்கிறேன் - எ.வ.வேலு
Jul 28, 2025 01:44 PM
54
சோழர் பெருமைகளை பிரதமர் பேசியதை தமிழனாக வரவேற்கிறேன் - எ.வ.வேலு
திருவண்ணாமலை மாநகராட்சியில் நல்லவன் பாளையம் பகுதியில் 56 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளியை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.
95 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கவும், ஓவியங்கள், பதாகைகளை வளாகத்தில் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் பேட்டி அளித்த அமைச்சர், பிரதமர் மோடி சோழர் பெருமைகளை பேசியதை தமிழனாக தாம் வரவேற்பதாக கூறினார்.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பெயர்களை அழகுத் தமிழில் பிரதமர் கூறியது தமிழின் நளினத்தையும் அழகையும் வெளிப்படுத்தியதாக எ.வ.வேலு தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu