ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
உலகம்
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் நிஸ்டார்..! அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைப்பு..
Jul 18, 2025 10:59 AM
72
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் நிஸ்டார்..!
ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் ஐ.என்.எஸ். நிஸ்டார், அதிகாரப்பூர்வமாக இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் சஞ்சய் சேத், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
118 மீட்டர் நீளம், 10 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் அதிநவீன டைவிங் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், கடந்த ஜூலை 8-ஆம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆயிரம் மீட்டர் ஆழம் வரை, ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், நீர்மூழ்கிக் கப்பல்களில் அவசர நிலை ஏற்பட்டால் வீரர்களை மீட்டு வெளிக்கொண்டுவரவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu