BIG STORIES
“விவசாயிகளில் கருப்பு ஆடுகள்” மிளகாய்க்கு ஷூ பாலீஷ் போட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ..! கதிர்ஆனந்த் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு
Jun 05, 2025 02:36 AM
86
“விவசாயிகளில் கருப்பு ஆடுகள்” மிளகாய்க்கு ஷூ பாலீஷ் போட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ..!
நம்ம ஊரில் இருந்து வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் , மஞ்சளில் புற்று நோய் ஏற்படுத்தும் ரசாயணம் கலக்கப்படுவதாகவும், மிளகாய்கள் மீது ஷூவுக்கு போடப்படும் பாலீஷ் போட்டு பளபளப்பாக அனுப்பபடுவதாகவும் திமுக எம்.பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறையின் சார்பில், வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கருத்தரங்கை துவங்கி வைத்து பேசினார். அப்போது தான் ஆரம்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை வெளி நாட்டிற்கு ஏற்றிமதி செய்யும் தொழில் செய்து வந்ததாக தெரிவித்தார். மேலும் நம்ம ஊரில் இருந்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் விரலி மஞ்சளில் சிலர் புற்று நோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலந்து ஏற்றுமதி செய்வதாக குற்றஞ்சாட்டினார்
அதே போல மிளகாய்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளில் உள்ள சில கருப்பு ஆடுகள் , ஷூ பாலீஸை போட்டு பள பளப்பாக்கி அவற்றை வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக ஆதங்கம் தெரிவித்தார் கதிர் ஆனந்த்
அனைக்கட்டு பகுதியில் உற்பத்தி ஆகிற முள்ளு கத்திரிக்காயை தரமாக உற்பத்தி செய்து ,எப்படி வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் இந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu