முகப்பு
ஐபிஎல் கோப்பை கனவை 18-ஆவது சீசனில் நனவாக்கியது பெங்களூரு அணி
Jun 04, 2025 04:30 AM
70
ஐபிஎல் கோப்பை கனவை 18-ஆவது சீசனில் நனவாக்கியது பெங்களூரு அணி
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி முதன்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் விளையாடிய பெங்களூரு அணி 190 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 22 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இந்த வெற்றியை அடுத்து, சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெக்கான், ஐதராபாத், குஜராத் அணிகளை அடுத்து 8-ஆவது அணியாக ஐபிஎல் கோப்பை பெங்களூரு வென்றுள்ளது. 17 ஆண்டுகளாக கோப்பை கனவில் இருந்த பெங்களூரு அணி, நடப்பு 18-ஆவது சீசனில் கோப்பை வென்று தனது கனவை நனவாக்கிக் கொண்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu