முகப்பு
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பைட் மாஸ்டராகி அட்டாக்..! லியோ ஸ்கேம் அம்பலமானது..! நடன இயக்குனர்கள் போர்க்குரல் ஏன் ?
Jun 03, 2025 05:14 AM
132
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பைட் மாஸ்டராகி அட்டாக்..! லியோ ஸ்கேம் அம்பலமானது..!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டான்ஸ் மாஸ்டர் என்ற இடத்தை பிடித்திருந்த நடன இயக்குனர் தினேஷ் மீது தான் இந்த தாக்குதல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருகின்றது..
நான் ரெடி தான்... பாடலுக்காக 1000 பேரை ஆடவைத்ததாக கூறி லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்திடம் சில பல லட்சங்களை அள்ளிய வசூல் சக்கரவர்த்தி தினேஷ், நடனம் ஆடியவர்களுக்கு உரிய பேட்டா கொடுக்காமல் 35 லட்சம் ரூபாய் வரை லபக்கியதாக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுகின்றது
ரஜினி, விஜய், அஜீத் , சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், உதயநிதி உள்ளிட்ட பலருக்கும் நடன அசைவுகளை கற்றுக் கொடுத்து ரசிகர்களை குதுகலப்படுத்திய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்தான் தற்போது குஸ்தி போட்ட பிரச்சனையில் சிக்கி உள்ளார்
ஆரம்பத்தில் ராஜூ சுந்தரம் மாஸ்டரிடம் குழு நடனமாடிய தினேஷ், 2001 ஆம் ஆண்டு மனதை திருடி விட்டாய் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். 25 வருடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றி உள்ளார்.
தற்போது தமிழ் சினிமா நடன இயக்குனர்கள் சங்க தலைவராக உள்ளார் தினேஷ். ஒரு குப்பை கதை, நாயே பேயே உள்ளிட்ட படங்களில் முழு நீள நாயகனாவும் நடித்த தினேஷ் ஆக்சன் ஹீரோ வாகும் ஆசையில் செய்த அடாவடியால் சங்க உறுப்பினர்கள் மத்தியில் வில்லனாகி இருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்
லியோ கையாடல் குறித்து புகார் அளித்த நபரை சமரசம் பேசுவது போல தனியாக அழைத்துச்சென்று அடித்து உதைத்ததாக புகார் தெரிவித்ததோடு, ஆதாரமாக அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் துணை தலைவர் கல்யாண் வெளியிட்டார்
மூத்த நடன இயக்குனர் அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீயும், சங்கத்துக்குள் இருந்து கொண்டு தினேசூம் அவரது அடி பொடிகளும் செய்த அட்ராசிட்டிகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த போது தினேஷுடன், விக்ரம் படத்தில் நடித்த நடன நடிகை டீனா உடன் இருந்தார்
இத்தனை களே பாரங்களுக்கும் மூலக்காரணம் யார் தெரியுமா ? வேறு யாருமில்லை சாட்சாத் தினேஷ் தான் மென்கின்றனர் உறுப்பினர்கள்.
பாலியல் புகார் கொடுத்த உறுப்பினரிடம் , புகாருக்குள்ளான நபரின் வீட்டில் தான் கை நனைத்திருப்பதால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை, நான் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று செல்போனில் பேசும் போது உறுதி அளித்தது தொடர்பான ஆடியோவை வெளியிட்டனர்
பார்ப்பதற்கு இந்த பூனையும் பால்குடிக்குமே என்று வலம் வரும் தினேஷ் செய்த சேட்டைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கின்றது என்று சுட்டிக்காட்டும் உறுப்பினர்கள், அவரை பதவியில் இருந்து நீக்க பெரும்பானமையான உறுப்பினர்களை கொண்டு துணை தலைவர் கல்யாண் பொதுக்குழு கூட்டியுள்ளனர்.
அப்போது தினேஷ் தனது ஆதரவாளர்களுடன் வந்து அனைவரையும் வெளியேற்றி அட்டகாசம் செய்வதாக வெளியேற்றப்பட்டவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
தமிழ் திரையில் பலரையும் ஆடவைத்த நடன இயக்குனர்களை , தன்னுடைய அடாவடி ஆட்டத்தால் அலறவிட்டதாக புகாருக்குள்ளான தினெஷிடம் இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது கருத்து தெரிவிக்க மறுத்த அவர், இரு தினங்கள் கழித்து விளக்கம் அளிப்பதாக கூறிச்சென்றார்.
தாக்குதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக மாஸ்டர் கல்யாண் தலமையிலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
விஜய்யின் ஆஸ்தான நடன இயக்குனராக 10க்கும் மேற்பட்ட படங்களில் தன்னுடைய நடன திறமையை வெளிக்காட்டிய தினேஷ் மாஸ்டர், கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய படங்களை குறைத்துக் கொண்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்து வதாலும், அவரது செயல்பாடுகள் கடுமையாக இருப்பதாலும் அவரை மற்றவர்கள் எதிர்த்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கபடி ஆடலாம், கில்லி ஆடலாம், இஷ்டத்துக்கு சினிமாவில் கூட ஆடலாம், ஆனால் நிஜ வாழக்கையில் ஆணவத்தில் ஆடினால் அது பெருங்குற்றம்.. அந்த குற்றம் கேடு தரும்.!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu