RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

முத்தமழையால் வைரலான சின்மயி.. தமிழில் பாட தடை ஏன்? என்ன நடந்தது?..

Jun 02, 2025 12:20 PM

105

முத்தமழையால் வைரலான சின்மயி.. தமிழில் பாட தடை ஏன்?  என்ன நடந்தது?..

”தக் லைப்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் வைரலானநிலையில், தமிழ் சினிமாவில் அவர் ஏன் இத்தனை காலம் பாடவில்லை, அவரை பாட கூடாது என தடை விதித்தது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சின்மயி. அதைத்தொடர்ந்து மைய்யா மைய்யா,”96” திரைப்படத்தில் வந்த காதலே காதலே பாடல், ஆருயிரே மன்னிப்பாயா, சர சர சாரக்காத்து, என்னோடு நீ இருந்தால் என பலரின் ஃபேவரைட் Playlist-ல் இருக்கும் இந்த பாடல்கள் அனைத்தும் பாடியது சின்மயி தான். இதனால் பலருக்கும் பிடித்த பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தார் சின்மயி.
அதுமட்டுமின்றி, 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு டப்பிங்கும் பேசி இருக்கிறார்.

இதற்கிடையில் தமிழத்தில் #metoo விவகாரம் அதிகம் பேசுபொருளாக மாறியது. இதில், பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை சின்மயி முன்வைத்தவர். அவருக்கு ஆதரவாக பலர் பேசியிருந்தாலும், இந்த விவகாரத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் சின்மயி தொடர் கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து டப்பிங் யூனியனிற்கு சந்தா செலுத்தவில்லை என கூறி தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து, அதன் தலைவர் ராதா ரவி, சின்மயினை நீக்கிய நிலையில், அவருக்கு தமிழ் படத்தில் பாட தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளாக சின்மயி தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பாடி வருகிறார்.

இதற்கிடையே தடையை மீறி பல போராட்டத்திற்கு பிறகு, சமீபத்தில் லியோ திரைப்படத்தில் திரிஷாவிற்கு சின்மயி டப்பிங் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ” தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ”முத்த மழை” பாடலை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். இதன் தமிழ் வெர்சனை பாடகி தீ பாடியுள்ளார்.

இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் 'முத்த மழை' பாடலை, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார். இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு எழுந்திருக்கிறது. தொடர்ந்து யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ள இந்த வீடியோவை, 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் ஒரிஜினல் வெர்ஷனைவிட சின்மயின் குரலில் அருமையாக இருக்கிறது என்றும், இவர் ஏன்? இத்தனை காலம் பாடவில்லை. தமிழ் சினிமாவில் பாட ஏன்? தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், ”இந்த பாடலுக்கு நான் முற்றிலும் அடிமையாகிவிட்டேன்” என்று இயக்குநர் வெங்கட் பிரபு, பாடகி சின்மயியை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வளவு நாள் கவனிக்கப்படாத பாடகி சின்மயி, மீண்டும் தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies